Friday, November 14, 2014

கடைச் சங்க காலத்திலும் பிற்காலத்திலும்


கடைச் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்த அடிநூல், அணியியல், அவிநயம் , அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை,
களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத்தண்டு, காலகேசி, காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள்நூல் (செவ்வாய், நிலவு போன்ற கோள்கள் பற்றியது), சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா , சாதவாகனம் , சிற்பநூல், சிறுகுரீஇஉரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர்யாத்திரை , தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம் (பரத நாட்டியம் பற்றியதாகலாம்), பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிருபடலம், பாவைப்பாட்டு, பாண்டியன்மரபு, பாட்டுமடை, பாரதம், புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்கண்டேயர்க் காஞ்சி, முணுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடிமுப்பது, மோதிரப்பாட்டு, யசோதாகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணற்ற நூல்கள் இப்போது இல்லாமல் போயின.


குமரிக் கண்டத்தில் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு நூல் கோள்நூல். அது வான் வெளி பற்றியது. அது இன்று இல்லை. அதற்கு பிறந்த வடமொழி கலந்த கொள்ளு பேத்திதான் இவை.

தமிழன் பெருமை: உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் !!!

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
http://tamiledhal.com/
தமிழன் பெருமை: உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம் !!!

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை

காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:

“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன
http://tamiledhal.com/


கடைச் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்த அடிநூல், அணியியல், அவிநயம் , அவிநந்தமாலை, ஆசிரியமாலை, ஆசிரியமுறி, ஆனந்தவியல், இளந்திரையம், இந்திரகாளியம், ஐந்திரம், ஓவியநூல், கடகண்டு, கணக்கியல், கலியாணகாதை, 
களவுநூல், கவிமயக்கிறை, கலைக்கோட்டுத்தண்டு, காலகேசி, காக்கைப்பாடினியம், சிறுகாக்கைப்பாடினியம், குண்டலகேசி, குணநூல், கோள்நூல் (செவ்வாய், நிலவு போன்ற கோள்கள் பற்றியது), சங்கயாப்பு, சயந்தம், சிந்தம், சச்சபுடவெண்பா , சாதவாகனம் , சிற்பநூல், சிறுகுரீஇஉரை, சுத்தானந்தப்பிரகாசம், செயன்முறை, செயிற்றியம், தந்திரவாக்கியம், தும்பிப்பாட்டு, தகடூர்யாத்திரை , தாளசமுத்திரம், தாளவகையோத்து, தேசிகமாலை, நாககுமாரகாவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம் (பரத நாட்டியம் பற்றியதாகலாம்), பஞ்சமரபு, பதினாறுபடலம், பரதசேனாபதியம், பரிநூல், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிருபடலம், பாவைப்பாட்டு, பாண்டியன்மரபு, பாட்டுமடை, பாரதம், புணர்ப்பாவை, புதையல்நூல், புராணசாகரம், பெரியபம்மம், பெருவல்லம், போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர்யாப்பு, மார்கண்டேயர்க் காஞ்சி, முணுவல், முத்தொள்ளாயிரம், மூப்பெட்டுச் செய்யுள், மூவடிமுப்பது, மோதிரப்பாட்டு, யசோதாகாவியம், வச்சத்தொள்ளாயிரம், வஞ்சிப்பாட்டு, வளையாபதி, விளக்கத்தார் கூத்து முதலிய எண்ணற்ற நூல்கள் இப்போது இல்லாமல் போயின.

குமரிக் கண்டத்தில் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு நூல் கோள்நூல். அது வான் வெளி பற்றியது. அது இன்று இல்லை. அதற்கு பிறந்த வடமொழி கலந்த கொள்ளு பேத்திதான் இவை.

Friday, October 31, 2014

வரலாற்றை மறைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

பழ.கருப்பையா
''திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; 'திராவிடன்’ என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.''
 ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு’ என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!''
''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம் என்று காட்டுவதற்காக அதன் தலையை வெட்டி, அதன் கால நீளத்தைக் குறைத்துவிட்டார்கள் (truncated )!''
இப்படி எல்லாம் ஓர் ஆங்கில நாளிதழில் என்னென்னவோ பிதற்றியிருக்கிறார், நம்முடைய சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி.
உலகத்தார், உண்டு என்பதை எல்லாம் இல்லை என்பதும், நன்று என்பதை எல்லாம் தீது என்பதும் அவருக்கு இயல்பு.
சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர்களின் நாகரிகம்; அது, உலக அளவில் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. அதை அடுத்து இந்திய மண்ணில் மலர்ந்த மற்றொரு நாகரிகம் வேதகால ஆரிய நாகரிகம்... நிறுவப்பட்ட முடிவுகள் இவை.
ஹரப்பா, மொகஞ்சதாரோவில் சான்று பகரும் வண்ணம் இன்றும் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் அகழ்வுகள், திராவிட இன மரபுகளைப் பறையறைந்து முழக்கவில்லையா? இன்றும், பாகிஸ்தான் பகுதிகளில் வழங்கும் பிராகுயி மொழி, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதானே?
வேதகால நாகரிகத்தை மறுப்பது என்பது அவர்கள் பாடு. ஆனால் ஆரிய - திராவிட இனங்களே இல்லை என்று சொல்வதன் நோக்கம், வேதகால நாகரிகத்தை மறுப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிட நாகரிகத்தை முற்றாக வேரறுப்பதுதான்.
'இந்து நாகரிகம்’ வரலாற்றில் எங்கே இருந்திருக்கிறது? நிகழ்காலத் தேவைக்கு ஏற்ப வேத நாகரிகம் அணிந்து வருகின்ற முகமூடிதானே இந்து நாகரிகம் என்பது!
இந்திய மக்களைத் தனித்தனியாக வேறுபடுத்தி அறியமுடியாத நிலையில், இசுலாமியர்கள் நம்மை மொத்தமாக 'இந்து’ என்று அழைத்தார்கள். அதை வெள்ளைக்காரன் புழக்கத்துக்குக் கொண்டு வந்துவிட்டான்.
'இந்து’ என்னும் சொல் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறதா? திருக்குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகிறதா? ஐம்பெருங்காப்பியங்களில் காணப்படுகிறதா? வடமொழிக் காப்பியங்களைத் தமிழில் 'ராமாயணம்’ என்றும் 'மகாபாரதம்’ என்றும் மொழிபெயர்த்த கம்பனுக்கும் வில்லிபுத்தூரார்க்கும் அந்தச் சொல் தெரிந்திருந்ததா? வால்மீகிக்குத் தெரிந்தல்லவா கம்பனுக்குத் தெரிய வேண்டும்? நமக்கு மிக நெருக்கத்தில் வாழ்ந்த, கருணையே வடிவான வள்ளலார் அந்தச் சொல்லை அறிவாரா?
அதனால்தான், விவேகானந்தர் திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் ''நாங்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை'' என்று ஆணித்தரமான குரலில் குறுக்கிட்டார். அத்தோடு வியர்த்து விறுவிறுத்து அமர்ந்துவிட்டார் விவேகானந்தர்.
அப்படிக் குறுக்கிட்டவர், நமக்கு 'நீராருங் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
வங்காளி, ஒரியன், மராத்தியன் என்று மொழிவழி இன அடையாளம் கொண்ட மாநிலங்கள் இன்னும் பல உண்டு. ஆனால், அவர்களுக்கு நம்முடைய சைவசித்தாந்தம்போல் தனியான மெய்யியல் மரபு இல்லை; குறள்போல் தனியான வழிகாட்டு நூல்கள் இல்லை; ஐம்பெருங்காப்பியங்கள் இல்லை; சிலம்பு போற்றும்மாதவி போன்ற நாட்டியத் தாரகைகள் இல்லை; யாழ்போன்ற இசைக் கருவிகள் இல்லை. எல்லாவற்றையும்விட அவர்களுடைய மொழிகள் வளர்ச்சியடைந்த செவ்வியல் மொழிகளாக இல்லை.
அதனால்தான், வங்கத்தில் காயத்தர் வகுப்பில் பிறந்த விவேகானந்தர், ஆரிய வேதாந்தத்தைத் தூக்கிப் பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதே கையறுநிலைதான் தமிழர்களின் நிலையும் என்று எண்ணிக்கொண்டு தெற்கே வந்து வேத வேதாந்தம், இந்து மறுமலர்ச்சி என்றெல்லாம் பேச முற்பட்டு, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையால் குறுக்கிடப்பட்டு அமரும் நிலை ஏற்பட்டது விவேகானந்தருக்கு.
தமிழ்நாட்டின் நிலையே வேறு. இங்கு பெருமாள் உலாவரும்போது தமிழ் முன்னால் போகும்; அதைக் கேட்டுக்கொண்டே மகிழ்ந்து பெருமாள் பின்னால் போவார். பெருமாளை விரட்டிப் பிடித்துக்கொண்டு சமஸ்கிருதம் போகும்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் புரட்சியாளர் ராமாநுசர் 'திராவிட வேதம்’ எனச் சிறப்பித்தார். அதை எழுதியவர்கள் திராவிடர்கள் என்பதால், அது 'திராவிட வேதம்’ எனப்பட்டது. தங்களுக்குத் தேவையான வேதத்தைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் திராவிடர்களுக்கு உண்டு என்பதை இது காட்டவில்லையா?
தமிழர்களை ஒருமைப்படுத்தித் தூக்கி நிறுத்துகின்ற முயற்சி, வரலாற்றில் இரண்டுமுறை நேரிட்டது. ஒருமுறை பக்தி இயக்கத்தாலும் இன்னொரு முறை திராவிட இயக்கத்தாலும்.
முதல் முயற்சியை மேற்கொண்டு வெற்றியும் கொண்டது பக்தி இயக்கம். அது ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிச் சில நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து நடைபெற்றது.
சாதியால் நேரிட்ட 'மேல்கீழ்’ என்னும் பாகுபாடு தமிழினத்தைச் சூறையாடிவிட்டது. தமிழினம் பிளவுபட்டுக் கீழ்மைப்பட்டிருந்தது. அதைப் போக்குவதற்கான முயற்சி சிவனையும் பெருமாளையும் முன்வைத்து நடத்தப்பெற்றது.
பார்ப்பனரிலிருந்து, தாழ்த்தப்பட்டவர், சலவைத் தொழிலாளி, பாணர், மண்பாண்டம் செய்வோர் என அனைவரும் நாயன்மார்களாகவும் ஆழ்வார்களாகவும் ஆகலாம்; 'உயர்நிலை அடைவதற்குச் சாதி ஒரு தடையில்லை’ என்பது முழக்கமாக்கப்பட்டது. பக்தி இயக்கத்துக்குப் பிறகும் சாதிகள் நீடித்தன என்றாலும், அவற்றின் மையமான உயர்வுதாழ்வு சைவ வைணவங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டன.
'பசுவைத் தோலுரித்துத் தின்று வாழும் புலையனாயினும் சிவனுக்கு அவன் அன்பன் ஆகில், அவன்தான் நான் வணங்கும் கடவுள்’ என்றார் திருநாவுக்கரசர். சிவனைவிடக் கூடுதலான இடம் அடியார்க்கு வழங்கப்பட்டு, சாதி அழுத்தி வைக்கப்பட்டது மாபெரும் புரட்சியாகும்.
பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் எதிராக நடந்த இந்தப் போரில், பக்தி இயக்கத்தால் ஏற்பட்ட தலையாய பயன் தமிழர்கள் ஒருமைப்பட்டதுதான்.
பக்தி வெள்ளம் சுழித்தடித்து ஆர்த்தபோது, ஞானசம்பந்தன் உள்ளிட்ட எண்ணிலடங்கா ஆரியர்கள் இந்த இழுவையில் உள்ளே வந்துவிட்டனர். திருமூலர், காரைக்கால் அம்மையார் என வந்த பக்தி இயக்கத்தில், திருநாவுக்கரசருக்கு நிகரான இடம் ஞானசம்பந்தருக்கு வழங்கப்பட்டது.
ஞானசம்பந்தர் சீர்காழி பார்ப்பனர். அவர் திராவிட சமய உயர்வைப் போற்றி உள்ளே வந்து, அதோடு இரண்டறக் கலந்து, அதன் மேன்மைக்குத் தோள் கொடுக்கப் புறப்பட்டமையால், அவர் தமிழர்களால் பெரிதும் போற்றப்பட்டார். தமிழர் வீடுகளில் ஞானசம்பந்தர் பெயர் பரவலாகக் காணப்படுவதற்கும் ஆரியர் வீடுகளில் அந்தப் பெயர் அறவே காணப்படாமைக்கும் ஞானசம்பந்தரின் திராவிட சமயப் பிணைப்பே காரணம்.
திராவிடர்கள் ஆவிடைக்குள் இருக்கும் லிங்கத்தை வழிபடுபவர்கள். உலகிலுள்ள எல்லாத் தொன்மையான நாகரிகத்தினரும் குறி வழிபாட்டினர்தாம்.
ஆயினும் திராவிட சமயத்தினரை ஆண்குறியை (சிசுனத்தை) வழிபடுபவர்கள் எனப் பழித்த வைதிக மரபில் வந்த ஆதிசங்கரர், அந்தச் சமயத்தை உயர்த்திப் பிடித்த ஞானசம்பந்தரை 'திராவிடச் சிசு’ என்றும் பழித்தார். பிறப்பில் ஆரியராயினும், அவர் சாதி நீக்கம் செய்யப்பட்டுத் திராவிடச் சிசு ஆக்கப்பட்டார். அவ்வளவு சினம் ஆதிசங்கரருக்கு. ஞானசம்பந்தருக்கு மிகவும் பின்னால் வந்தவர் ஆதிசங்கரர். செத்துப் போனவரைக்கூடத் தன் சாதியில் இருக்கவிட ஆதிசங்கரருக்கு மனம் இல்லை.
வேத பாராயணம் செய்து தீயை வழிபடும் குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் 'சிசுனத்தை’ வழிபடச் சென்றுவிட்டதை ஆதிசங்கரரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தி இயக்கத்தால் திராவிடச் சமயங்களை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட ஆரியர்களின் எண்ணிக்கை ஆதிசங்கரரை மருளச் செய்தது.
திராவிடச் சமயத்தால் மேலும் மேலும் இழுத்துச் செல்லப்படாமல் இருக்க, ஆரியர்களுக்கு 'அத்வைதம்’ என்னும் வைதிகக் கோட்பாட்டைப் பரிந்துரை செய்து 'நீயே பிரம்மம்' எனப் போதித்தார் ஆதிசங்கரர்.
வாழ்க்கைப் போராட்டத்தில் நொறுங்கிப் போகின்ற மனிதனுக்கு 'நானே பிரம்மம்’ (அகம் பிரம்மாஸ்மி) என்று எண்ணிப் பார்ப்பது சுகத்தைத் தரவில்லை; பயத்தைத் தந்தது.
ஆகவே, நினைப்பில் ஆதிசங்கரர் விரும்பியபடி அத்வைதிகளாகவும், நடப்பில் திராவிடச் சமய 'சிசுன’ வழிபாட்டினராகவும் அவர்கள் விளங்கத் தலைப்பட்டார்கள்.
ஆதிசங்கரரால் பழிக்கப்பட்ட, தமிழ்நாடு முழுவதும் உள்ள 'சிசுனங்களுக்கு,’ அவர்களே பால் ஊற்றி, நீர் ஊற்றி நீராட்டுபவர்களாகவும், தீபங் காட்டுபவர்களாகவும் மணியடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது ஆதிசங்கரரின் தோல்வியையும் சிசுன வழிபாடு என இழிவுபடுத்தப்பட்ட திராவிடச் சமயத்தின் வெற்றியையும் குறிக்கவில்லையா?
பூசகர்களாகத் திராவிடர்கள் இல்லை என்பதும், பூசனைக்குரிய மொழியாகத் தமிழ் இல்லை என்பதும் மிகப் பெரிய உறுத்தல்தான் எனினும், ஆரியர்கள் பூசனை செய்கிற தெய்வங்கள் திராவிடத் தெய்வங்கள் என்பது திராவிட நாகரிகத்தின் வெற்றியா? வேத நாகரிகத்தின் வெற்றியா?
பக்தி இயக்கம் போலவே, தமிழர்களை ஒருமைப்படுத்துவதற்கான பிறிதொரு இயக்கத்தின் காலத்தேவை 20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் ஏற்பட்டது.
பக்தி இயக்கம், சாதிகளைத் தாண்டித் தமிழர்களை ஒருமைப்படுத்த ஒருகட்டத்தில் சிவனையும் அடுத்த கட்டத்தில் பெருமாளையும் முன்வைத்ததுபோல, திராவிட இயக்கம் மொழிவழிப்பட்ட இன உணர்வை முன்வைத்தது. இது தெளிந்த அறிவுநிலை.
அரசு அலுவலகங்களில் ஆரிய ஆளுமை, பண்பாட்டுத் தளத்தில் சமஸ்கிருத ஆளுமை, சமூகத் தளத்தில் திராவிடர்கள் சூத்திரர்களாகிவிட்ட தாழ்மைநிலை... இவை எல்லாம் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த பெரியாரை, அதிலிருந்து திருப்பித் தன்மான இயக்கத்தைத் தோற்றுவிக்கச் செய்தது. பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் இணைந்து தமிழர்க்குச் செய்த நன்மை அளப்பரியது.
சொல்லொணா அறிவும் நெறிசார்ந்த வாழ்வும் உடைய ராஜாஜி, 'குல்லூகப் பட்டர்’ ஆக்கப்பட்டது கொடுமைதான். ஆயினும் 1,000 ஆண்டு அடிமை நிலையிலிருந்து வீறுகொண்டு எழும் ஓர் இனம் அளந்து பேச முடியாது என்பதை அறிந்தே அமைதி காத்தார் ராஜாஜி.
ஆனால், 1967 தேர்தலில் ''பூணூலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள்'' என்று ராஜாஜி சொல்லமுடிந்ததற்குக் காரணம், 'சமூகத்தில் பேதம் நீங்கிச் சமநிலை ஏற்படுவதற்கான காலத்தேவைதான் திராவிட இயக்கம்’ என்பதை ராஜாஜி உணர்ந்திருந்ததாகத்தான் இருக்கும்.
தன்மானம் என்பது தன்னுடைய மானம் மட்டுமில்லை; இனத்தின் மானமும்கூட! இனத்தின் முகம் மொழிதானே! ஆகவே திருக்குறள், சிலப்பதிகாரம் முன்னிலை பெற்றன. தொழத்தக்க கண்ணகி, பண்பாட்டின் பிரதிபலிப்பாகிவிட்டாள். சமஸ்கிருதத்துக்கு எதிரான தனித்தமிழ்ப் போர் மறைமலை அடிகள் தலைமையில் நடந்தது. சமஸ்கிருதக் கலப்பால் தமிழின் நேர்த்தி கெட்டுப் போகிறது என்று சொல்லி பிறப்பால் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரி, தன்னுடைய பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞன் என மாற்றிக்கொண்டதைக் கண்டு பூரித்த தமிழ்ச் சமூகம், அவரைத் தலைமேல் வைத்துக் கூத்தாடியது. திராவிட இயக்கத்தின் முக்கியத் திருப்பம் அதன் ஒரு பிரிவுத் தலைமையை ஜெயலலிதா மேற்கொண்டது.
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்னும் வரிசையில் ஜெயலலிதா படம் காணப்படுவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் திராவிடக் கட்சிக்கு ஒரு பார்ப்பனப் பெண் தலைமை ஏற்பதும் ஒரு முரண் அல்லவா என்று கருணாநிதி கேட்டார்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையிலிருந்து ராஜபக்ஷே எதிர்ப்புநிலை வரை, இந்தி எதிர்ப்பிலிருந்து பி.ஜே.பி-க்கு சமஸ்கிருத வார ஒழிப்புநிலை வரை, எந்தத் திராவிடக் கொள்கையிலிருந்தாவது ஜெயலலிதா தடம் புரண்டிருந்தால், கருணாநிதியின் 'திராவிட முரண்’ என்னும் வாதம் நிலைபெறும்! அப்படி நடந்ததா? இன்னும் சொன்னால் கருணாநிதியைவிடக் கூடுதலாக அவர் வேகப்படவில்லையா? இப்போது அது குறித்ததல்ல வாதம்!
வேத மதத்தினரான ஞானசம்பந்தரின் திராவிட சமயச் சார்பும் சமஸ்கிருத மொழியைச் சார்ந்திருக்க வேண்டிய பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ் இயக்கச் சார்பும், ஜெயலலிதாவின் திராவிட இயக்கச் சார்பும் ஆரிய முரண்களே தவிர, எப்படித் திராவிட முரண்கள் ஆகும்?
ஐரோப்பாவில், தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட ஒரு பெண், ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மணமாக நடுச்சாலையில் ஓடினாளாம்.
தேடுவாரற்றுப் போய்விட்ட நிலையில் தன்னுடைய இருப்பைப் வலுப்படுத்திக்கொள்ளச் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி இவ்வளவும் செய்ய வேண்டியிருக்கிறது.
எனவே, ஆரியக் கூத்தாடுகிறார் சுப்பிரமணியன் சுவாமி!

Thursday, October 2, 2014

பழந்தமிழரின் அளவை முறைகள்…!

முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை… எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி :-http://kulasaisulthan.wordpress.com/

கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!!


2 குரு – 1 உயிர்
2 உயிர் – 1 சணிகம்
12 சணிகம் – 1 விநாடி
60 விநாடி – 1 நாழிகை
2 1/2 நாழிகை – 1 ஓரை
3 3/4 நாழிகை – 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் – 1 சாமம்
4 சாமம் – 1 பொழுது
2 பொழுது – 1 நாள்
15 நாள் – 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) – 1 மாதம்
6 மாதம் – 1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்) – 1 ஆண்டு
60 ஆண்டுகள் – 1 வட்டம்
நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் – அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம்

Wednesday, October 1, 2014

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள் !

திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ!
திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

Thursday, September 25, 2014

தமிழ் எப்பொழுது தோன்றியது.....?

சைகை மொழியை பயன்படுத்திய மனிதன் அதனை தொடர்ந்து பேச்சு மொழிக்கு மாறியிருக்கிறான். அப்படி பேச்சு மொழி உருவாகிய காலங்களில் தோன்றியிருக்க கூடிய ஒரு மொழிதான் தமிழும் என்று நம்பப்படுகிறது.
தமிழின் தோற்றம் "குமரிக்கண்டம்" அல்லது இலமூரியாக்கண்டம்" என்ற பெரும் நிலப்பரப்பை சேர்ந்த மக்களிடையில் தான் முதலில் தோன்றியது என்று நம்பப்படுகிறது.
சுமார் கி.மு 500000 ஆண்டுகளிற்கு முன்பு அவுசுத்திரேலியா தொடங்கி தென்ஆபிரிக்கா வரை விரிந்து கிடந்த (இந்தியா உள்ளிட்ட) நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம் என்று அறிஞர் ஓல்டுகாம் தெரிவித்திருக்கிறார்.
குமாரிக்கண்டம் அல்லது இலமூரிக் கண்டம் என்று அழைக்கப்ட்ட நிலப்பகுதி
அறிஞர்களான எக்கேல் மற்றும் கிளேற்றர் ஆகியோரின் கருத்துப்படி "சாந்தா தீவுகளில்" தொடங்கி தெற்காசியாவின் தென்பகுதி வழியாக தென் ஆபிரிக்காவின் கீழ்கரை வரை ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததென்றும் அங்கு குரங்கையொத்த "இலமூரியா" (Lemuria) என்ற இனம் வாழ்ந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்
தமிழ் மொழியானது கி.மு 500 000 ஆண்டுகளிற்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சுட்டொலிகளில் இருந்து தோன்றியது தான் தமிழ் மொழியின் ஆரம்பம்.
இன்றைய அவுசுத்திரேலியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட தென் ஆபிரிக்காவரை பரந்து விரிந்து கிடந்த நிலப்பரபில் தனி மொழியாக தமிழ் உருவாகியிருக்கிறது என்றே சொல்லாம். தமிழ் மொழியின் தோற்றம் பற்றி சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் மூலம் அறிய முடியும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
குமரிக்கண்டத்தை "பழந்தமிழ் நாடு" என்றே பல எழுத்தாளர்கள் தமது எழுதியுள்ளனர். இந்த கண்டத்தில் தனி ஆட்சியாக வாழ்ந்தவன் தான் தமிழன். அவனது நாகரிகம் தான் திராவிட நாகரிகளம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களுடைய நாகரிகம் தான் உலகிலேயே பழமைவாய்ந்த நாகரிகமாக நம்பப்படுகிறது.
உலகெங்கும் தனது நாகரிகத்தை விஸ்தரித்து வைத்திருந்தான் தமிழன். அதற்கு சான்றாக "பனீசியர்களின்" நாணயங்களையும் கல்வெட்டுக்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த குமரிக்கண்டத்தை ஆண்ட தமிழினம் கடல்கோள்களினால் அழிந்து நாசமாய் போனது. குமரிக்கண்டத்தை நான்கு பெரும் கடல்கோள்கள் அழித்து நாசமாக்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார்கள்.
நான்கு பெரும் கடல் கோள்கள்
1. தென்மதுரை -கடல் கொண்டது
2. நாகநன்னாட-கடல் கொண்டது
3. கபாடபுரம்- கடல் கொண்டது
4. காவிரிப்பூம்பட்டிணம்-கடல் கொண்டது
தவிர அதிக அளவிலான சிறிய கடல் கோள்கள். இப்படிப்பட்ட பெரும் அழிவுகளினால் நிலம் சிதைக்கப்ட்டதோடு தமிழரின் வரலாற்றுக் குறிப்புகள் ஆவணங்கள் என எல்லாமே கடலுடன் கடலாகவும் மண்ணுடன் மண்ணாகவும் அழிக்கப்ட்டிருக்கிறது.
இந்த கடல்கோள்களினால் தமிழினம் மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகள் உயிரினங்கள் என எல்லாமே அழிந்தது. உலக வடிவமே மாறியது.
முதன்மை நாகரிகமான திராவிட நாகரிகத்தில் காலப்போக்கில் பல மொழிகள் உருவெடுத்தன. எல்லா திராவிடக் குடும்ப மொழிகளுமே தமிழில் இருந்து பிரிந்தவைதான் என்று சொல்கிறார்கள். இலக்கண மற்றும் இலக்கிய ஆயிரக்கணக்கான நூல்களை தமிழ் மொழி மாத்திரம் தான் ஆரம்பத்தில் வைத்திருந்தது என்று நம்பப்படுகிறது.
நன்றி :-http://paddathumsuddathum.blogspot.in/

Tuesday, September 16, 2014

கடலுக்கு அடியில் தமிழர் நகரம்

கடலுக்கடியில் பூம்புகார்..
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது.
கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.
வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”
இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.
தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?
அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.
இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )
1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.
ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?
பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.
இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா?
வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?
இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?
புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
நன்றி :-http://sssjna.blogspot.in/

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.
‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.
‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.
அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.
அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...
‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.
ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.
அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.
நன்றி :-http://tamilenkalmoossu.blogspot.in/

Tuesday, August 19, 2014

பழந்தமிழர் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
நன்றி :- http://ssntamil.blogspot.in/