Tuesday, November 10, 2015

பழந்தமிழர் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். 
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
பூவிழி மகேந்திரன்
http://tamilvizhumiyangal.blogspot.in/

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர்

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்!!!.
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!
யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..
(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்
பொதுவான பெண் யானையின் பெயர்கள்:
பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:
(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்
யானையின் மற்ற காரண பெயர்கள்:
(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்
யானையின் ஏனைய பெயர்கள்:
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்