Tuesday, November 10, 2015

பழந்தமிழர் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். 
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
பூவிழி மகேந்திரன்
http://tamilvizhumiyangal.blogspot.in/

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர்

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன்!!!.
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!
யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள்: இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..
(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்
பொதுவான பெண் யானையின் பெயர்கள்:
பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி
நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:
(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்
யானையின் மற்ற காரண பெயர்கள்:
(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்
யானையின் ஏனைய பெயர்கள்:
(1) களிறு
(2) மாதங்கம்
(3) கைம்மா
(4) உம்பர்
(5) அஞ்சனாவதி
(6) அரசுவா
(7) அல்லியன்
(8) அறுபடை
(9) ஆம்பல்
(10) ஆனை
(11) இபம்
(12) இரதி
(13) குஞ்சரம்
(14) இருள்
(15) தும்பு
(16) வல்விலங்கு
(17) தூங்கல்
(18) தோல்
(19) எறும்பி
(20) ஒருத்தல்
(21) நாக
(22) கும்பி
(23) கரேணு
(24) கொம்பன்
(25) கயம்
(26) சிந்துரம்
(27) வயமா
(28) தந்தி
(29) மதாவளம்
(30) தந்தாவளம்
(31) மந்தமா
(32) மருண்மா
(33) மதகயம்
(34) போதகம்

Friday, October 30, 2015

அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது

அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது
கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு
முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள
வேண்டிய சில, . . .
~~~~~~~~~~~~~~~~~~
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக
பார்ப்போம் முதலில் . . .
1.தமிழ் வருடங்கள்:-
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத
5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ
9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர
12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம
15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண
19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர
26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத
30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி
33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது
37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு
40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய
44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி
47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள
51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி
54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி
57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன
60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~
2.அயணங்கள்:-
அயணங்கள் இரண்டு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம்
வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி
மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ்
வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~
3.ருதுக்கள்:-
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது
ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~
4.மாஸங்கள்:-
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~
5.பக்ஷங்கள்:-
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல்
சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல்
சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும்
வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும்
தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம்
ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~
6.) திதிக்கள்:-
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி
15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~
7.வாஸரங்கள்:-
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~
8.நட்சத்திரங்கள்:-
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி
5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம்
8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம்
12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை
15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம்
18.கேட்டை 19.மூலம் 20.பூராடம்
21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம்
24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி
27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~
9.கிரகங்கள்:-
கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக
(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்)
சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம்
முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம்
முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~
11.நவரத்தினங்கள்:-
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~
12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~y~~~~
y
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~
14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~
15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகள
ை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய
புராணம்.c
~~~~~~~~~~~~~~~~~~
16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

Tuesday, July 28, 2015

ஓம் சிவாயநம.... தற்பொழுது எங்களிடம் கீழ்க்கண்ட புத்தகங்கள் கிடைக்கும்....

தற்பொழுது எங்களிடம் கீழ்க்கண்ட புத்தகங்கள் கிடைக்கும்....
1. ருத்ராட்சம். 100/- ரூபாய்
2. கோரக்கரின் சந்திரரேகை. 110/- ரூபாய்
3. பிரணவ சூத்திரம். பாகம்-1. 110/- ரூபாய்
4. பிரணவ சூத்திரம். பாகம்-2. 180/- ரூபாய்
5. பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்.160/- ரூபாய்
6. அதிர வைக்கும் அகோரிகள். 120/- ரூபாய்
7. தென் கயிலாயம் வெள்ளியங்கிரி. 85/- ரூபாய்
8. பெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளிய வழி. 25/- ரூபாய்
9. கூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம். 40/- ரூபாய்
10.ஆண்மை பலமும் தாது விருத்தியும். 45/- ரூபாய்
11. இரசமணி மகத்துவம். 25/- ரூபாய்
12.வசிய ஜால தந்திரங்கள். 25/- ரூபாய்
13.ஜால வித்தை வசியங்கள். 25/- ரூபாய்
14.சித்தர்களின் மந்திரக்கலை. 80/- ரூபாய்
15.சித்தர்களின் மானுட ரகசியம். 70/- ரூபாய்
16.சித்தர்களின் அஷ்டமாசித்திகள். 85/- ரூபாய்
17.சித்தர்களின் சாகாக் கலை. 60/- ரூபாய்
18.மரணத்தின் மறு பக்கம். 65/- ரூபாய்
19.போதி தர்மர். 65/- ரூபாய்
20.கருணைக் கடல் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா. 175/- ரூபாய்
21.நடராஜ தரிசனம். 275/- ரூபாய்
22.ஆன்மீக அதிர்வு தரும் அருள் மிகுந்த சதுரகிரி. 80/- ரூபாய்
23.போகர் 7000 - சப்த காண்டம் ஒரு பார்வை. 120/- ரூபாய்
24.போகர் ஏழாயிரம் - ஓர் ஆய்வு நூல். 369/- ரூபாய்
25.போகர் பாடல்கள். பாகம்1. 80/- ரூபாய்
26.போகர் பாடல்கள். பாகம்2. 60/- ரூபாய்
27.சிவமகா புராணம். 330/- ரூபாய்
28.தேவி பாகவதம். 390/- ரூபாய்.
29.மூலிகை மருத்துவம். 150/- ரூபாய்
30.ABS மூலிகை தாவரவியல் அகராதி. 700/- ரூபாய்
31.பூர்வீக மருத்துவக் களஞ்சியம். 1600/.- ரூபாய்
32.வளமும் நலமும் அருளும் வலம்புரி, இடம்புரிச் சங்கு..... 490/- ரூபாய்
33.பித்ரு பூஜை. 20/- ரூபாய்
34.ஆன்மீக ரகசியங்கள். பாகம்1. 100/- ரூபாய்
35.ஆன்மீக ரகசியங்கள். பாகம்2. 100/- ரூபாய்
36.மூலிகைச் சமையல். 150/- ரூபாய்
37.யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம். 120/- ரூபாய்
38.பிராண வித்யா. (அனுபவ குண்டலினி யோகா பயிற்சி) 120/- ரூபாய்
39.அனைவருக்கும் உகந்த பிராணயாம பயிற்சிகள். 120/- ரூபாய்.
40. உடலையும் உள்ளத்தையும் காக்கும் யோகம். 180/- ரூபாய்
41.சூரிய-சந்திர-நமஸ்காரம். 60/- ரூபாய்
42.அதிவீரராம பாண்டியர் இயற்றிய கொக்கோகம். 180/- ரூபாய்
43.காதல்+காமம்=கடவுள். 100/- ரூபாய்
மேலும் பல அற்புதமான - கிடைத்தற்கரிய - புத்தகங்கள் வேண்டுமா....?
அன்பு கூர்ந்து கீழ்க்கண்ட இணைய தளங்களைப் பார்வையிடுங்கள்....
www.sathuragiribooks.com
www.sathuragiribooks.blogspot.com
www.facebook.com/spiritualbookworms
PHONEல் உறுதிப்படித்துவிட்டு நேரிலும் சந்திக்கலாம்....
ஸ்ரீ சதுரகிரி புத்தகக் கடை,
இரண்டாவது மாடி,
D-72, எட்டாவது கிராஸ் கிழக்கு,
தில்லை நகர்,
திருச்சி-620 018.
CELL: 94434-12387

உலகம் தோன்றிய வரலாறு (அன்று முதல் கி.பி. 1947 வரை)

கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன் : பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்: நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000: இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000: முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
கி.மு. 300000 : யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000 : நியாண்டெர்தல் மனிதன், கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000: கடைசி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000: தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000: தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000: ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000: ஒளியர் கிளை மொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527: முதல் தமிழ்ச் சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100: பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற
நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000: கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087: கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000 : கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000: உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்
கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்:
இடமிருந்து வலம்:
நெடுமண்டை நீள்வட்ட வடிவம்;
இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்-
நீளுருண்டை வடிவமும்
ஆப்பு வடிவமும்;
நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப்பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850 பின் : இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்க வில்லை.)
தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொரு நராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம்,
ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776 : கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு:கெராஸிமவ்)
கி. மு. 750 : பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700: சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543: கௌதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600: லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னல மின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600 : கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப் பட்டுள்ளது.
கி. மு. 599 - 527 : மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560 : பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478 : கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500 : கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478 : இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450: ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348 : சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400 : கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328: உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270: மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326 : அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305 : சந்திரகுப்த மௌரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302 : சந்திரகுப்தரின் அமைச்சர் கௌடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300 : சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300 : கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232: மௌரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245 : சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251 : புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220 : சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221 : புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200: கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180 : குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி.உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர்வாழ்ந்த காலம்.
கி.மு. 200 : முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200 : தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87: ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62 : செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42 : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25 : பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்தஉக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள்.இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார்,பொன்முடியார்கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31: உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9: இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன்.
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர்ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1 : கருவூர் ஏறிய ஔ¢வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4 : ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
கி.பி. 1 - 20: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல்கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வௌ¢ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.
கி.பி. 10 : உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.
கி.பி. 21 - 42: குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வௌ¢ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.
கி.பி. 42 - 100: சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன்
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம். கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் (martin,1928 ) செய்த உருமாற்றம்.
கி.பி. 53 : ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.
கி.பி. 101 - 120 : பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.
கி.பி. 105 : சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி. 107 : ரோமப் பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.
கி.பி.120-144: ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.
கி.பி.145-175 : வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.
கி.பி.175-200 : கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி) மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும்
நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்:பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை (மேலே இடம்),சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில்
மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.
கி.பி.180: இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.
கி.பி.200 : இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.
கி.பி.250-275 : வரகுண பாண்டியன் ஆட்சி
கி.பி.275-300 : மாணிக்கவாசகர் காலம்.
கி.பி.300-700: தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.
கி.பி.300-700: தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவ மன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.
கி.பி.358 : துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்
கி.பி.400 : மனுதர்மம் அமைக்கப்பட்டது.
கி.பி.419 : பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.
கி.பி.450-535 : தெற்கில் போதிதர்மர் காலம்.
கி.பி.570-632: முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்
கி.பி.590-631 : சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.
கி.பி.600-900: வைணவ ஆழ்வார்காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.
கி.பி.610 : நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல்.
கி.பி.622 : நபி நாயகம் மெக்கா தப்பிச் செல்லல்.
கி.பி.630-644 : சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம். தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.
கி.பி.641-645 : அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.
கி.பி.650 : திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்
கி.பி.788 : ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.
கி.பி.800: இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கௌதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.
கி.பி.825: சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.
கி.பி.850: மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.
கி.பி.900 : குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம். பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).
கி.பி.900 : இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.
கி.பி.1000 : உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்)
இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்
கி.பி.1000: சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.
கி.பி.1000 : பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.
கி.பி.1000: துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர்.
கி.பி.1010 : சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.
கி.பி.1017-1137 : தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப் பிடிக்கப்பட்டது.
கி.பி.1024: முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.
கி.பி.1040 : சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.
கி.பி.1150: வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.
கி.பி.1197 : நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால்
அழிக்கப்பட்டது.
கி.பி.1230-60 : ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.
கி.பி.1232 : போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில்
பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.
கி.பி.1250 : சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.
கி.பி.1268-1369 : தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.
கி.பி.1272: மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.
கி.பி.1296: அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.
கி.பி.1300 : கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.
கி.பி.1311 : தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.
கி.பி.1333-1378: மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
கி.பி.1340: போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான். சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப் பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில்
ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.
கி.பி.1336 : விஜய நகரஅரசு(1336-1646) தொடர்ந்தது. அரிகரன் விஜயநகர அரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் - தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். சௌராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர்.
வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப் புலவர்களும், காலமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.
கி.பி.1337: உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.
கி.பி.1350 : தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.
கி.பி.1440: ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கி.பி.1469-1538: சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்
கி.பி.1492: கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.
கி.பி.1498 : போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன்
முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.
கி.பி.1500 : திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.
கி.பி.1500: புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த
முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.
கி.பி.1500 : உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.
கி.பி.1509: தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.
கி.பி.1510: போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.
கி.பி.1546: நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப் பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.
கி.பி.1565: விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட


Sunday, July 26, 2015

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி

புறப்பொருள் வெண்பா மாலைன்னு ஒரு இலக்கண நூல் எட்டாம் நூற்றாண்டு CE கரந்தைப் படலம் 35
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
tongue emoticon"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி" tongue emoticon
முதல் டுப்பாகூர் :- அவனுங்க சொன்னது "கல்தோன்றா" இங்கே இருப்பதோ "கல்தோன்றி"ன்னு இருக்கு !
இரண்டாவது டுபாகூர் :-கல்தோன்றா முன் எப்படி ஒரு மொழி உருவாக முடியும் ? சரி சாய்ஸில் விடுவோம் !
இங்கே கல் என்றால் என்ன என்பதை எதுமே விளக்காமல் "கல்தோன்றா" அல்லது "கல்தோன்றி" என்பதை எப்படி ஒரு வடிவமாக\பொருள் எடுத்துக்க முடியும் ?
"கல்" க்கு மலை என்ற பொருளும் உண்டு !
"மண்" க்கு வயல் என்ற பொருளும் உண்டு !
மலை தோன்றி வயல் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குட்டின்னு வச்சிப்போம்
மலை இருந்தும் விவசாயம் செய்யும் அளவுக்கு பக்குவபடாத மனித குழுவுக்கு தெரிந்ததெல்லாம் வேட்டையாட மட்டுமே தெரியும் வாளோடு (கூரிய கற்கள் என்றே எடுத்துக்க முடியும் தன் தேவைக்காக உணவை உற்பத்தி செய்யும் முன் அவனின் குணாதிசியம் வேட்டையாடுதல் பின்பு விவசாயம் - சேமித்து வைத்தல்-பண்டம் மாற்றுதல்-தனது இருப்பிடத்தின் வளையத்தை பெரியதாக ஆகுதல்-Evolution ப்ராசஸ் )
இதில் மொழிக்கு என்ன வேலை இருக்கு இந்த செய்யுளில் ?
நிலம் சார்ந்த தகவலை தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கு !
மாதவி பந்தல்

Friday, July 24, 2015

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!

ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்.
மேலும் ஆதாரங்களுடன் பல செய்திகளை ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் சொல்வேன்.
- மஞ்சை வசந்தன்